HALL TICKET :
👉 முதல் பக்கம் COLOUR PRINT எடுத்து கொள்ளுதல் அவசியம் .
👉 மீதமுள்ள பக்கங்கள் BLACK & WHITE PRINT போதுமானது .
👉ID PROOF : ORIGINAL(01) & XEROX (01) கொண்டு செல்லல் வேண்டும்.கொண்டு செல்லப்படும் ID PROOF இன் பிறந்ததேதி HALL TICKET-இன் பிறந்ததேதி உடன் பொருந்தவேண்டும் . ( ஆதார் , பான் அட்டை , ஓட்டுனர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை , கடவுசீட்டு ஏதேனும் ஒன்று ).
👉COLOUR PHOTO : 01 ( HALL TICKET PHOTO தெளிவாக தெரியவில்லை என்றால் ATTEST வாங்குவதற்கு பயன்படும் ).
👉HALL TICKET முகவரி & ID CARD முகவரி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .
👉VACCINE CERTIFICATE அவசியமில்லை .
QUESTION BOOKLET:
👉கொடுக்கப்படும் கேள்வித்தாளின் அனைத்து பக்கங்களும் சரிபார்த்து , அவை சரியாக இருந்தால் மட்டுமே , BOOKLET எண்ணை OMR SHEET இல் எழுத வேண்டும் .
👉ஏதேனும் பக்கங்கள் குறைந்தாலோ (அல்லது ) கிழிக்கப்பட்டிருந்தாலோ உடனே HALL SUPERVISOR வசம் தெரிவித்து , புதிய கேள்வித்தாள் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் .
👉விடைகள் கேள்வித்தாளில் குறிக்க கூடாது .
வேண்டுமானால் நமக்கு மட்டும் தெரியும் அளவில் மிகச்சிறிய புள்ளி மட்டும் வைத்துக்கொள்ளலாம் .(use black ball point pen only)
👉கணிதம் சார்ந்த கேள்விகளுக்கு BOOKLET இன் கடைசி பக்கத்தில் மட்டுமே பயிற்சி செய்து பார்க்க வேண்டும் ..(பென்சில் கூட பயன்படுத்தலாம் )
EXAM HALL ROOM :
👉செருப்பு அணிந்து செல்தல் சிறந்தது . ஷூ - வைத் தவிர்த்தல் நலம் .
CALCULATOR உட்பட எந்த எலக்ட்ரானிக் உபகரணங்கள்(மொபைல்) கொண்டு செல்வதற்க்கு தடை .
👉ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படாத பாட்டிலில் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி .
👉நாகரீகமான உடைகள் அணிந்து செல்வது நலம் .
👉தாம் அமருகின்ற இருக்கையை சுற்றியுள்ள பகுதியில் ஏதேனும் துண்டுச்சீட்டு இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளல் வேண்டும் . ஏதேனும் கிடந்தால் அதனை HALL SUPERVISOR உதவியுடன் வெளியே எறிந்து விட வேண்டும் .
👉தேர்வு முடியும் வரை அறையிலேயே அமைதியுடன் அமர்ந்திருக்க வேண்டும் .
👉முகக்கவசம் (mask ) அணிய வேண்டும் .
👉கைக்குட்டை(KERCHIEF) அவசியம் ஆண் , பெண் & திருநங்கை அனைவரும் கொண்டு செல்லல் நலம் .
OMR SHEET:
👉தேர்வு முடிந்த பின்பு தாங்கள் குறித்துள்ள விடைகளின் (OPTION WISE) எண்ணிக்கையை எண்ணி அதற்குரிய OMR SHEET இல் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் சிறிதும் பிழையின்றி கட்டாயம் குறிக்க வேண்டும்.
👉உதாரணமாக ; மொத்தமுள்ள 200 கேள்விக்கான விடைகள் குறித்தல் பின்வருமாறு :-
A- 78
B-30
C-42
D-46
E-04(விடை தெரியாத பட்சத்தில் இதனை தெரிவு செய்ய வேண்டும்)
முக்கியக்குறிப்பு :
👉விடைகளுக்கு NEGATIVE மதிப்பெண் கிடையாது .

Comments
Post a Comment
நன்றி